vendredi 15 décembre 2017

கூட சதுர்த்தம்

கூட சதுர்த்தம்
[நான்காமடி மறைந்திருக்கும் ஓவியக்கவி]
  
கூடம் - மறைவு. சதுக்கம் - நான்கு
மறைவான நான்காம் அடியை உடையது.
  
சில இலக்கண நுால்கள் கூடசதுர்த்தத்தைக் கூட சதுக்கம் என்றே குறிப்பிட்டுள்ளன.
  
நாலடியால் ஆன ஒரு செய்யுளின் நான்காம் அடி, ஏனைய மூன்று அடிகளை மேனின்று கீழிழிந்தும், கீழ் நின்று மேலேறுவதுமாக எழுதி முடித்த வரி மூன்றினிடை மறைந்து நிற்பது கூட சதுர்த்தம் எனப்படும்.
  
வஞ்சி விருத்தம்!

தேவா! செல்வா!என் மாதாவே!
மாவா! துாயா!கா! தா!என்றன்
பாவா வே!சீரேந் தும்தேனே!
வா..வா! மாமாயா!என்வேந்தே!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
14.12.2017

Aucun commentaire:

Enregistrer un commentaire